மதுரை கட்டணமில்லா பேருந்துகளில் தினசரி 5 இலட்சம் மகளிர்கள் பயணம் : மதுரை போக்குவரத்துக் கழகம்

Madurai Minutes
0

மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் 75வது குடியரசு தின விழா 26.01.2024 வெள்ளிக்கிழமை அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் திரு. A.ஆறுமுகம்  அவர்கள் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசிய கொடி ஏற்றி வைத்து தலைமையுரை ஆற்றினார்கள். 


அவர் பேசும்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களில் 2300 பேருந்துகள் இயக்கப்பட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினசரி பயனடைந்து வருகின்றனர். இதில் கட்டணமில்லா பேருந்துகள் மூலமாக தினமும் 5 லட்சத்திற்கும் மேலான மகளிர்கள் பயணம் செய்து வருகின்றனர். வரும் காலங்களில் எலக்ட்ரிக் பேருந்துகள் 200 மற்றும் BS-6 பேருந்துகள் 634 ஆக மொத்தம் 834 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வருடந்தோறும் சிறந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களை சார்ந்த சிறந்த கிளை மேலாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், பயணச்சீட்டு ஆய்வாளர்கள், ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள், தூய்மை நலப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் ஆக மொத்தம் 35 மேற்பட்டவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.


இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை பொது மேலாளர்கள் திரு.K.சமுத்திரம், திரு.C.K.ராகவன், முதுநிலை துணை மேலாளர்(மனிதவள மேம்பாடு) திரு.V.இராமன், இணை இயக்குனர் (மக்கள் தொடர்பு) திரு.R.பாஸ்கரன், அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் திரு.G.சந்தானகிருஷ்ணன், போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !